13-03-09 அன்று ‘தலித் தலைமை ஏற்போம், சமத்துவ தமிழ்ச் சமூகம் படைப்போம்’ எனும் தலைப்பில் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1. ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் இனவெறிப் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழகமே திரண்டெழுந்து தன்னெழுச்சியாகப் போராடியது. ஆனால் மன்மோகன் சிங் தலைமையில், சோனியா காந்தி தலைமையில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களின் போராட்டத்தை அலட்சியம் செய்தது. அதோடு நின்றுவிடாமல் இவ்வினவெறிப் போருக்குப் போர்க்கருவிகள் வழங்கியும், ஆயுதப் பயிற்சியளித்தும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. இத்தகைய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என உரிமையுடன் தமிழக மக்களிடம் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. 2. ஈழத்தமிழர் நலனுக்காகப் போராடும், திருமாவளவன் தலைமையில் அமைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தின் முழுமையான ஆதரவைப்பெற ஈழத்தமிழர்களுக்கு இன்னல் விளைவித்த, தமிழகத்திற்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்ற தனது விருப்பத்தைத் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கிறது. 3.ஆண்டாண்டு காலமாய் அடிமையாக்கப்பட்டுக் கிடக்கும் தலித்துகள் சமூக, அரசியல், பொருளாதாரக் களங்களில் விடுதலை பெற்றவர்களாய்த் தலைநிமிர வேண்டும். அதற்கு இந்திய/தமிழக அரசியல் அதிகார மையங்களை தலித்துகள் கைப்பற்ற வேண்டும். இதற்கு இசைவாக தலித் தலைமையை ஏற்கும் முற்போக்குக் கொள்கையுடைய கட்சிகள், ஈழத்தமிழர் மற்றும் தமிழ்தேசிய நலன்களில் அக்கறையுடைய கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு தமிழக மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.Saturday, March 14, 2009
தீர்மானங்கள்
13-03-09 அன்று ‘தலித் தலைமை ஏற்போம், சமத்துவ தமிழ்ச் சமூகம் படைப்போம்’ எனும் தலைப்பில் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1. ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் இனவெறிப் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழகமே திரண்டெழுந்து தன்னெழுச்சியாகப் போராடியது. ஆனால் மன்மோகன் சிங் தலைமையில், சோனியா காந்தி தலைமையில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களின் போராட்டத்தை அலட்சியம் செய்தது. அதோடு நின்றுவிடாமல் இவ்வினவெறிப் போருக்குப் போர்க்கருவிகள் வழங்கியும், ஆயுதப் பயிற்சியளித்தும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. இத்தகைய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என உரிமையுடன் தமிழக மக்களிடம் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. 2. ஈழத்தமிழர் நலனுக்காகப் போராடும், திருமாவளவன் தலைமையில் அமைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தின் முழுமையான ஆதரவைப்பெற ஈழத்தமிழர்களுக்கு இன்னல் விளைவித்த, தமிழகத்திற்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்ற தனது விருப்பத்தைத் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கிறது. 3.ஆண்டாண்டு காலமாய் அடிமையாக்கப்பட்டுக் கிடக்கும் தலித்துகள் சமூக, அரசியல், பொருளாதாரக் களங்களில் விடுதலை பெற்றவர்களாய்த் தலைநிமிர வேண்டும். அதற்கு இந்திய/தமிழக அரசியல் அதிகார மையங்களை தலித்துகள் கைப்பற்ற வேண்டும். இதற்கு இசைவாக தலித் தலைமையை ஏற்கும் முற்போக்குக் கொள்கையுடைய கட்சிகள், ஈழத்தமிழர் மற்றும் தமிழ்தேசிய நலன்களில் அக்கறையுடைய கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு தமிழக மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)














படைப்பாளிகள் கூட்டமைப்பு நிகழ்த்திய கூட்ட பதிவு சிறப்பாக செய்துள்ளீர்கள் வாழ்த்துகள் காண்க
ReplyDeletehttp:/rathinapughazhendi.blogspot.com